Advertisment

போரூர் அருகே காரில் சென்ற பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை... 4 பேர் கைது!

assault on a woman in a car in Borur... 4 people arrested!

சென்னை போரூரில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு நகையை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் கொளுத்துவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போரூர் சுங்கச்சாவடி அருகே காலை நேர டீக்கடை நடத்தி வந்தார். இவர் சொந்தமாக கார் ஒன்றும் வைத்திருந்தார். ஒரு ஓட்டுநரை நியமித்து அந்த காரை கால் டாக்சியாக பயன்படுத்தி வந்துள்ளார் அந்த பெண். இந்நிலையில் நேற்று இரவு ஐயப்பன்தாங்கல் கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இந்த காரானது நின்றுகொண்டிருந்தது. காரில் அந்த பெண்ணும் கார் ஓட்டுநரும் இருந்துள்ளனர். அப்பொழுது அங்கு கஞ்சா போதையில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி கார் ஓட்டுநரை அடித்து விரட்டிவிட்டு அப்பெண்ணை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் மிரட்டி அவரிடம் இருந்த 8 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

police incident porur Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe