assault on students; Teacher suspended

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 7 மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது மேலநம்பிபுரம். இங்கு செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். சுமார் 45 மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் பெற்றோருடன் கண்மாய் ஒன்றல் குளிக்கச் சென்ற மாணவர்களை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

Advertisment

தொடர்ந்து விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அதே மாணவர்களை மீண்டும் ராதாகிருஷ்ணன் அடித்ததில் மாணவர்களுக்கு உடலில் தடிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். புகாரினை தொடர்ந்து மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.