A assault staged at Tasmac's doorstep; Screaming women

Advertisment

நெல்லையில் டாஸ்மாக் கடை வாசலிலேயே பெயிண்டர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவலறிந்து அங்கு வந்த கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் நயினார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பெயிண்டர் வேலை செய்து வரும் நிலையில் கருங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து வந்துள்ளார். அப்போது அவரைத் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடை வாசலிலேயே வைத்து அவரை வெட்டி படுகொலை செய்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் தடயவியல் துறை நிபுணர்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதேநேரம் கொலைக்கு உள்ளான மணிகண்டனின் உறவினர்கள் அங்கு கூடி கதறி அழுதனர். இரவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.