Advertisment

காருக்குள் வைத்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை; நான்கு மாணவர்கள் மீது வழக்கு

Assault by stripping in car; Case against four students

கோப்புப்படம்

சென்னையில் கல்லூரி மாணவரை காருக்குள் வைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் முன்னாள் மாணவர்கள் நான்கு பேர் மீதுவழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

வெளிநாடு செல்லவிருந்த பெண் தோழியை கல்லூரி மாணவர் ஒருவர் விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது உடன் வந்த முன்னாள் மாணவர்கள் அந்த மாணவரை காருக்குள்ளேயே வைத்து தாக்கி நிர்வாணப்படுத்தி அதை வீடியோவாகப் பதிவு செய்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

அந்த வீடியோவைக் காட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police Chennai car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe