Advertisment

காரில் லிப்ட் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஒருவர் கைது

 assault by claiming to give a lift in a car... One arrested

Advertisment

காரில் லிப்ட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை ஒரகடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

குண்ணவாக்கத்தைச் சேர்ந்த38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலைக்குச் செல்வதற்காக பேருந்துநிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த இளைஞர் ஒருவர் லிப்ட் கொடுப்பதாக கூறி அப்பெண்ணை காரில் ஏற்றிச் சென்றுள்ளார். குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் காரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய அந்த இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு நான்கு கிராம் நகைகளை பறித்துக் கொண்டு ஆளில்லாத இடத்தில் அப்பெண்ணை இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஏகனாம்பேட்டையைசேர்ந்த மற்றொரு பெண்ணும் இதேபோல் ஒரு புகாரை கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஒரகடம் போலீசார் கூடுவாஞ்சேரி வள்ளலார் நகரைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற அந்த நபரை கைது செய்ததோடு குற்றச்செயலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

incident police car sriperumputhur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe