'Assassination of teacher..'-One week holiday notice for concerned school

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை பள்ளி வளாகத்திலேயே வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது படுகொலை நிகழ்ந்த பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி ஆசிஷ் ராவத் அவர்களும் இருந்தனர் தொடர்ந்து.

'Assassination of teacher..'-One week holiday notice for concerned school

Advertisment

உயிரிழந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கோவி.செழியன் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய கவுன்சில் கொடுக்கப்படும். அதேபோல் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர்தெரிவித்துள்ளார்.