Advertisment

அதிமுக பிரமுகர் படுகொலை; மீண்டும் பரபரப்பு

Assassination of AIADMK leader; The excitement again

Advertisment

புதுச்சேரியில் கடலூரை சேர்ந்தஅதிமுக வார்டு செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுவை மாநில எல்லைப் பகுதியாக உள்ள திருப்பணாம்பாக்கம் பகுதியில் கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பத்மநாபன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கோவில் கலை நிகழ்ச்சி பார்ப்பதற்காக நேற்று இரவு வந்த பத்மநாபன் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் மீது கார் ஒன்று மோதியது. உடனே கீழே விழுந்த பத்மநாபனை காரில் இருந்து இறங்கியவர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர். கட்சி பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

admk police Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe