Advertisment

திருமணத்தை மீறிய உறவு; வடமாநில பெண்ணுக்கு கரூரில் நடந்த கொடூரம்

Assam woman passed away in Karur

Advertisment

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த மூலிமங்களம் சாலையில் தானியா பயோ எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 20 நாட்களாக அஸ்ஸாம் மாநிலத்தை சார்ந்த சிந்தாமணி போரோ என்ற 44 வயது பெண் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதே நிறுவனத்தில் அஸ்ஸாம் மாநிலத்தை சார்ந்த சுபோல் மும்மு என்ற 32 வயது ஆண் ஒருவர் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஆடைகள் இன்றி உயிரிழந்த நிலையில் நிறுவனத்தின் புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் கிடந்துள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும், மது போதையில் இருந்த சுபோல் முர்மு, அஸ்ஸாம் செல்வதாக கூறியதாகவும், அதற்கு சிந்தாமணி போரோ தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இல்லை என்றால் தன்னை கொன்று விட்டு ஊருக்கு போ என கூறியதால் மது போதையில் இருந்த அந்த நபர் முர்முவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபோல் முர்முவை கைது செய்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Assam karur police woman
இதையும் படியுங்கள்
Subscribe