Lover who killed the girl

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நவதி அருகில் ஒரு பெண்ணின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நவதி பகுதியைச் சேர்ந்த ராணி என்பவரை காணவில்லை என்றதும், அவரா என அவரது குடும்பத்தினரை அழைத்து வந்து அடையாளம் பார்க்க சொல்லியுள்ளனர் போலீசார். இதில் கொலை செய்யப்பட்டது ராணி தான் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

கட்டிட மேஸ்திரியான ராஜாவின் மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா கட்டிட மேஸ்திரி என்பதால் அடிக்கடி பெங்களூரு சென்றுவிடுவார். இந்தநிலையில் தேவராஜ் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராணியின் வீட்டிற்கு அடிக்கடி தேவராஜ் வந்து செல்வார்.

தேவராஜ் இப்படி வந்து செல்லும்போது, அவர் சமீபத்தில் வாங்கிய 3 சென்ட் நிலத்தைப் பற்றி பேசிய ராணி, தனது பேருக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். எழுதி தருகிறேன் என்று சமாளித்து வந்துள்ளார் தேவராஸ்.

Advertisment

இதனிடையே தேவராஜுக்கு தெரியாமல், வேறொரு நபருடன் ராணி பழகியுள்ளார். இதனை தேவராஜ் நேரில் பார்த்துள்ளார். பின்னர் ராணியை கண்டித்துள்ளார்.

அப்போது தனக்கு 3 சென்ட் நிலத்தை எழுதி தந்தால் அந்த நபருடனான பழக்கத்தை விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார் ராணி.

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு போனில் கூறி உள்ளார். இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது வேறு நபருடனான கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.