Advertisment

'ஆஷா' பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வேண்டி அரசிடம் மனு!

ASHA Employees Petition for Job Security

Advertisment

ஆஷா (ASHA) பணியாளர்களுக்குத் தொகுப்பூதியமாக மாதம் 15,000/- ரூபாய் வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள் அனைத்தையும் கிராமப்புறங்களில் அமுல்படுத்தும் பணியை முழுவதுமாக மேற்கொண்டு வரும் ஆஷா பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்மேலும் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வரும் ஆஷா பணியாளர்களுக்கு ஒருமுறை சிறப்பு ஊதியமாக ரூபாய் 15,000/- வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், அவர்கள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலச் செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

employees Erode petition
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe