Arvind Kejriwal arrived in Chennai

மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆளாத மாநில முதல்வர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

Advertisment

கடந்த 9 நாட்களாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குசென்று திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவாலும் பஞ்சாப் முதலமைச்சரும் தன்னை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

அதன்படி தற்போது சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.