Aruppukottai hotel fire incident

விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை பஜார் பகுதியில், இனிமைஹோட்டல் என்ற பெயரில் தனியார் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் மாடியிலுள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து தீ பரவி, மாடி அறை முழுவதும் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததும், உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

Advertisment

இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீவிபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதனப் பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள்கள், சேர்கள் ஆகிய அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Advertisment

Aruppukottai hotel fire incident

இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது .மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.