விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி அருண் உள்ளிட்ட 5 பேர் உயிரைப் பறித்தது தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைதான். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சண்முகம் “ஏழைகளை பாதிப்புக்கு ஆளாக்கும், தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

Advertisment

 arrested

தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையிலும் ஆன்-லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சக்திவேல், சிவசங்கரன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இம்மூவரும் கைபேசி வாயிலாக கேரள மாநில லாட்டரிகளை ஆன்-லைனில் விற்று வந்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து ரூ.1 லட்சம ரொக்கத்தையும், கைபேசிகளையும் பறிமுதல் செய்த அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.