Arun Nehru campaign Strengthen the hand of Cm stalin who is doing good to the people

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதி மற்றும் முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம் செய்தார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் நேற்று (12.4.2024) மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி தொகுதிக்குட்பட்ட நெய்வேலி, வேங்கைமண்டலம், மூவானுர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

Advertisment

பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழக மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகம் வர பாரதிய ஜனதா கட்சியினரின் கண்ணுக்கு தெரிகிறது. இயற்கை சீற்றம், பேரிடர் காலங்கள், விவசாயிகளின் பிரச்சனை, வேலைவாய்ப்பு, நீட் தேர்வு ஆகியவை குறித்து தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுத்தால் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டு கொள்வதில்லை.

Advertisment

ஏளனம் செய்வதும், மறுத்து அறிக்கையை விடுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேருவிற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவைவெற்றி பெற செய்ய வேண்டும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவும், விவசாயம், கல்வி, மேம்படுவதற்கு திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு உங்கள் நல் ஆதரவை தர வேண்டும்” என்று பேசினார்.அப்போது முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காட்டுக்குளம் கணேசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முசிறி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண்நேரு தீவிர பிரச்சாரம் செய்து பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசும்போது, “சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக முசிறிநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல் இன்னும் ஏனைய பல்வேறு திட்டங்களை தமிழக மக்களின் நன்மைக்கு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். உங்கள் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து அதனை நிறைவேற்றப் பாடுபடுவேன். எனவே இந்தத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார்.

Advertisment

பிரச்சாரத்தில் திமுக நகர செயலாளர் சிவக்குமார், நகரத் துணைச் செயலாளர் செவுளி சிவக்குமார், நகராட்சி துணைத் தலைவர் சுரேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் முகேஷ், மற்றும் நிர்வாகிகள் டிஜிட்டல் ரமேஷ், சந்துரு, வெற்றி சரவணன், சிவநடராஜன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், கம்யூனிஸ்ட் நல்லுசாமி உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். செல்லும் இடமெல்லாம் வேட்பாளர் அருண் நேருவிற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்