Advertisment

அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளது - வெங்கையா நாயுடு

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் கேட்டறிந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Advertisment

a

அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கேட்டறிந்த வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

Arun Jaitley
இதையும் படியுங்கள்
Subscribe