முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதையோ மறைக்கும் நோக்கத்தில் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை தடைகோரியிருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

 Arumugaswamy Commission Answer

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவந்த நிலையில் அப்போலோ நிர்வாகம் சார்பில் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், ஏற்கனவே விசாரணைக்கு அழைத்த மருத்துவர்களை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறது ஆணையம் இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறதுஎனக்கூறி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத்தடையை பெற்றிருந்தது அப்போலோ. இந்த இடைக்காலத்தடை இரண்டு முறை நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஏதோ உள்நோக்கத்தோடு, எதையோ மறைக்கும் நோக்கத்தில்மருத்துவர்களை விசாரணைக்கு அனுப்ப அப்போலோ நிர்வாகம் மறுக்கிறது என நேரடி குற்றச்சாட்டைகூறியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.