தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விசாரணை கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.அதில், வரும் 24ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில், மேலும் நான்கு மாதங்களுக்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை எட்டாவது முறையாக தமிழக அரசிடம் அவகாசம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.