ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று காலை பொன்னையன் ஆஜரானார்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பொன்னையன் பத்திரிகை - தொலைக்காட்சிகளுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்து வந்தார். இந்த விவரங்களை வைத்து ஆணையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
யார் சொன்ன தகவலை வைத்து பேட்டி அளித்தீர்கள்?. அந்த தகவல் எல்லாம் உண்மைதானா? என்றும் விசாரணை ஆணையத்தில கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பொன்னையன் சொன்ன பதில்களை வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்தனர்.