Skip to main content

டிசம்பர் 5 அதிகாலை ஜெயலலிதாவின் இதயம் தானாக இயங்கியது... ஏன் முரணாக பதிலளிக்கிறீர்கள் நீதிபதி கேள்வி!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு இன்னும் தீர்க்கப்படாத மர்மமாகவே இருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கிட்டதட்ட ஒரு வருடமாக விசாரித்து வருகிறது. தற்போது இது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அப்போலோவின் தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் மீனல் எம்.போரா என்பவரிடம் விசாரித்தபோது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எக்மோ பொருத்தியபோது அவர் கண்களில் அசைவு காணப்பட்டது, மெதுவாக மூச்சு விடத் தொடங்கினார். எனக் கூறினார். மேலும் அவர் டிசம்பர் 5, 2016 அன்று அதிகாலை 3.20 மணிக்கு ஜெயலலிதாவின் இதயம் தானாக செயல்பட தொடங்கியது எனவும் கூறினார்.

 

அதற்கு நீதிபதி எக்மோ பொருத்தியபின் ஜெயலலிதாவிற்கு இதயத்துடிப்பு இல்லை என மற்ற மருத்துவர்கள் கூறுகிறார்களே, நீங்கள் ஏன் முரணாக கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆனால் அதை அந்த டெக்னீசியன் மறுத்துவிட்டார். ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது 4 டெக்னீசியன்கள் அங்கு இருந்தோம், மருத்துவர் ஆலோசனையின் அடிப்படையில் இதயத்திற்கு மசாஜ் செய்தோம் என டெக்னீசியன் காமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

கருத்து தெரிவிக்க ஒரு நபர் ஆணையம் அழைப்பு

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

A one-person commission to comment

 

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த ஒரு நபர் குழு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவிக்கையில், “இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்தக் குழு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துகள் தெரிவிக்க ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.