ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பப்பட்ட பலரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் 13.06.2018 புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 11ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இன்றும் அவர் மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/photo 19 _0.jpg)
இதேபோல் சசிகலாவின் சகோதரர் மகள் டாக்டர் ராஜமாதங்கி, மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோரும் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களும் இன்று ஆஜராகினர்.
Follow Us