S George

Advertisment

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பப்பட்ட பலரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த நிலையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 13ஆம் தேதி ஜார்ஜ் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் ஜூன் 14ல் அப்பல்லோ மருத்துவர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 16ஆம் தேதி பூங்குன்றன் மற்றும் ராமலிங்கம் ஐ.ஏ.எஸ். ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.