Arumbakkam bank robbery... Tiruvannamalai rushes to a special force!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'பெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது.

Advertisment

இதுதொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த வங்கியிலேயே பணியாற்றி வந்த முருகன் என்ற ஊழியர் தனக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்ததாகவும், அதனை குடித்த பின் தான் மயங்கி விட்டதாகவும் வங்கியில் காவலாளி தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர் முருகனை தேடி வந்த நிலையில், அவரது உறவினர் பாலாஜி, முருகனின் தாய், சகோதரி, உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். ஆறு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.