அரும்பாக்கம் வங்கி கொள்ளை... சென்னை காவல் ஆணையர் பேட்டி!

Arumbakkam Bank Robbery... Chennai Police Commissioner Interview!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'ஃபெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த வங்கியில் காவலில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த பிறகு வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர் முருகனை தேடி வந்த நிலையில், அவரது உறவினர் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளியான முருகனை கைது செய்துள்ளனர்.

வங்கி உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும், செல்போன் எண்களை அடிப்படையாக வைத்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்த முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். சற்று நேரத்தில் இந்த கொள்ளை தொடர்பாக காவலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகையில் இதுவரை 18 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Arumbakkam Bank Robbery... Chennai Police Commissioner Interview!

இந்நிலையில்இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ''இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது. இதில் திருட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே பள்ளியில்படித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் அவர்கள் திட்டமிட்டு இதைச் செய்தால் பெரிய விஷயமாக ஆகாது என நினைத்து செய்துள்ளார்கள். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை பின் இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் வெளிவரும்'' என்றார்.

bank Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe