Advertisment

வங்கியில் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்பு - காவல்துறை தகவல்

பரக

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'ஃபெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகையில் ஏற்களவே 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தக் கொள்ளை தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் வங்கியில் கொள்ளை போன 32 கிலோ நகைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe