Skip to main content

அரும்பாக்கம் வங்கி கொள்ளை... துப்பு கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

Arumbakkam bank robbery... 1 lakh rupees reward for clues!

 

அரும்பாக்கம் வங்கி கொள்ளை குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'பெடரல் வங்கி'  கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த பிறகு வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது.

 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர் முருகனை தேடி வந்த நிலையில், அவரது உறவினர் பாலாஜி, முருகனின் தாய், சகோதரி, உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். ஆறு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நேற்று தமிழக டிஜிபி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அப்படி தகவல் கொடுக்கும் பட்சத்தில் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.