திமுக தலைவர் கலைஞருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதால் விரைவில் அவர் குணமடைவார். மேலும், அனைவரின் வாழ்த்து, பிரார்த்தனை மூலம் அவர் குணமடைவார். விரைவில் நலம்பெற்று அனைவருக்கும் அவரே நன்றி தெரிவிப்பார் என்று நம்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கலைஞரின் உடல்நலம் குறித்த விசாரித்த ஜனாதிபதி, பிரதமர், ராகுல், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.