பாஜகவின் தமிழக மேலிடப்பொறுப்பாளர் முரளிதரராவ் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கே கனிமொழி எம்.பியை சந்தித்து சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’கலைஞரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கனிமொழி தெரிவித்தார். கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளிக்கும் கலைஞர் உடல்நலம் பெற்று திரும்பி வருவார்’’என்று தெரிவித்தார்.