Advertisment

தமிழர் வாழ்வின் அழகியலை பறைசாற்றும் ஓவியக் கண்காட்சி; தொடங்கி வைத்த அமைச்சர்

artist chithan siva showcased drawing exhibition trichy

சோழன் கலை ஊற்று, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் லட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இணைந்து நடத்தும் ஓவியக் கண்காட்சி இன்று (04.05.23) காலை 10.15 மணிக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், ஜெய்நகர், கு.காமராசர் அரங்கத்தில் நடைபெற்றது.தமிழர் வாழ்வின் அழகியலை பறைசாற்றும் ஓவியர் சித்தன் சிவாவின் பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சித் தொடக்க விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.என். சேகரன் தலைமையில் நடைபெற்றது. கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் வரவேற்றார்.

Advertisment

கண்காட்சியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் கிராமத்தில் நடக்கும் விழா, கோவில் திருவிழா, காளை அடக்கும் ஓவியம்மற்றும் பல வகையான ஓவியங்கள் உள்ளன.

Advertisment

கண்காட்சிக்கு ஆசிரியர் ஸ்டாலின், அரவிந்த் சிலம்பம் குழுவினர், பாலா சண்முகம், ஜெகன்நாத், தங்கவேலு, செல்வராஜ், கருணாநிதி, சிவக்குமார், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டார்கள். முடிவில் ஓவியர் சுரேஷ் கனி நன்றி கூறினார்.

trichy DRAWING Artist
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe