மேகதாது அணை கட்ட அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல. உழவர் கண்ணிரை துடைப்பதற்காக நடக்கும் போராட்டம். மேகதாது அணை பற்றி முதல் அறிவிப்பு வந்தபோதே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது அணைக்கு தடை உத்தரவை கூட ஜெயலலிதா, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அரசுகளால் பெற முடியவில்லை. இடைக்காதல தடை உத்தரவு பெற்றிருந்தல் மேகதாது அணை கட்ட கர்நாடகம் துணிந்து இருக்காது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு எதிர்க்காமல் தூங்கி வருகிறது.

Advertisment

கர்நாடக அரசின் அணை திட்டத்துக்கு அனுமதி கிடைத்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான். மேகதாது அணை பிரச்சனை பற்றி விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறிய அவர் தமிழகத்தில்மழையே இல்லை புல் முளைக்கவே இடம்இல்லைஎந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை மலரும் என கூறுகிறார்கள்தமிழ்நாட்டில் என பேசியிருந்தார்.

Artificially rained and filled the pond and let the lotus blossom-Tamilisai!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

தமிழகத்தில் மழையே வராது புல்லே முளைக்காது எனும்போது தாமரை எப்படி மலரும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின், மழை வருகிறதே. அவர் பேசும் பொழுதே மழை வந்துவிட்டதே. ஒன்று சொல்லவிரும்புகிறேன் இயற்கையாகவே மழை வரவில்லை என்றாலும் சரிமோடியுடைய அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாகவாவது மழையை வரவைத்து குளத்தை நிரப்பி தமிழகத்தில்தாமரையை மலர செய்வோம். தாமரை மலர்ந்தே தீரும் என கூறினார்.