ADVERTISEMENT

“அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம்” - ககன்தீப் சிங் பேடி 

11:58 AM Nov 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்தார் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் சுகன்தீப் சிங் பேடி. வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அவசரகால விபத்து சிகிச்சை பிரிவு, காய்ச்சல் பிரிவு, பொது சிகிச்சை பிரிவு மையம், சலவைக் கூடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம் அமைப்பதற்கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டு நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் செயற்கை கருவூட்டல் மையங்களில் அரசின் விதிமுறைப்படி செயல்படாத மையங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தவறு செய்யும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் வந்த சிறுமிக்கு அங்குள்ள மருத்துவமனை பாதுகாவலர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லை எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக தமிழ்நாட்டில் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது இந்த ஆண்டு தீக்காயங்கள் பாதிப்பு குறைந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால் இந்த தீக்காயங்களின் அளவு குறைந்து இருப்பதாகவும், இது மேலும் குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் சுத்தமான தண்ணீர் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதனால் பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு சுமார் 6000 பேர் டெங்கு காய்ச்சினால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கப்பட்டிருப்பதாகவும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் சனி - ஞாயிறு கிழமைகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT