Arriving in a car with family and smuggling goats; Police investigation

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.