Advertisment

வந்து சேர்ந்த அமித்ஷா; நடைப்பயணத்தைத் தொடங்கும் அண்ணாமலை

 Arriving Amit Shah; Annamalai which starts the walk

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்தில் இருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தற்பொழுது நிகழ்ச்சியானது துவங்கியுள்ளது. தற்பொழுது அமித்ஷா வந்தடைந்த நிலையில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

முன்னதாககூட்டணிக்கட்சித் தலைவர்கள் வந்திருந்த நிலையில் அமித்ஷா வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். பின்னர் விழா மேடைக்கு வந்து சேர்ந்த அமித்ஷாவை அண்ணாமலை மற்றும்கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதன் பின்னர்நடைப் பயணம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234சட்டமன்றத்தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Rameswaram Annamalai amithsha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe