
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்அருகே 4 நாட்டு துப்பாக்கி, விலை உயர்ந்த மதுபானங்கள், வாட்சுகள், கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் இல்லனூர் பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் காரின் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, காரில் வெளிநாட்டு மதுபானங்கள் அதிக அளவிலிருந்தது.இதனால் அங்கிருந்தசம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் உயர்ரக மதுபானத்தை நண்பனுக்கு வாங்கிச் சென்றதாகத்தெரிவித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயர் ரக துப்பாக்கிகளும் இரண்டு ஏர்கன்கள் இருப்பதும் தெரியவந்தது.அதன் பிறகு காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த உயர் ரக துப்பாக்கிகள், ஏர்கன், கஞ்சா, விலை உயர்ந்த வாட்சுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)