gun

Advertisment

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் நடந்து சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுப்ரமணி வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்றிய திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அவரிடம் விசாரனை நடத்துகின்றனர்.

இன்று அதிகாலை கர்நாடகாவை சேர்ந்த சுப்ரமணியம் பை ஒன்றுடன் திருப்பதி மலைக்கு நடந்து படி ஏறி சென்றார். திருப்பதி மலையில் உள்ள நடை பாதையில் செயல்படும் ஸ்கேனிங் செண்டரில் அவரிடம் இருந்த கை பையை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஸ்கேனிங் இயந்திரம் மூலம் சோதனை செய்தனர். அப்போது அவருடைய பையில் லைசென்ஸ் இல்லாத ஒரு துப்பாக்கி, கத்தி ஒன்று ஆகியவை இருப்பது தெரிய வந்தது. லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை திருப்பதி மலைக்கு கொண்டு செல்ல முயன்ற சுப்ரமணியத்தை கைது செய்துள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

அரவிந்த்