Arrested fake spreader on social media in thirupathur

Advertisment

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில், நள்ளிரவில் சாலையில் இஸ்லாமியர்கள் 700 பேர் தினமும் தொழுகையில் ஈடுபடுவதாகவும்,அவர்களை யாரும் தடுக்கவில்லை, அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனபுகைப்படத்தோடுசெய்தி வெளியிட்டார், திருப்பத்தூர் தேவாங்கர் தெரு பகுதியை சேர்ந்த 60 வயதானரவீந்திரன் என்பவர்.

சமூகவலைதளத்தில் வந்த செய்தி அறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்ததில் அது பொய்யான தகவல் என்று அறிந்து, அதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், அது பொய்யான செய்தி என தெரிவித்திருந்தார். அதோடு அந்த புகைப்படம், 2018ல் அலகாபாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது வழக்கு பதியப்படுவதோடு,கைதும் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே எச்சரித்து இருந்தார்.அதனடிப்படையில் மே 2 ந் தேதி ரவீந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பத்தூர் நகர போலீஸார். மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் சிலரை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.