சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசார்நேற்று தமிழக மின்சாரவாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவரை கைது செய்துள்ளனர்.

Advertisment

தற்போது கேங்மேன் பணிக்காக தமிழக அரசு உடல் தகுதி தேர்வு செய்து முடித்துள்ள நிலையில், அடுத்தகட்ட எழுத்து தேர்வில் தேர்வு செய்து பணிக்கு அனுப்புவது என்னுடைய வேலை,நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று 25 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு சேலத்தை சேர்ந்த தேவராஜ் ஏமாற்றி வந்துள்ளார்.

Advertisment

 arrested in Chennai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் ஹரிபாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை அண்ணா சாலை அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்த சேலத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தேவராஜை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இவர் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார். இவரது பின்னணி என்ன, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியாற்றும்அதிகாரிகளுக்குதொடர்பு இருக்கிறதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.