Skip to main content

அமைச்சர் வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு- ஒருவர் கைது!!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
​    ​velumani

 

கோவையில் அமைச்சர் வேலுமணி வீட்டின் மீது கல் வீசி ஜன்னல் கண்ணாடி உடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் வீட்டின் மீது கல் வீசியவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை விசாரித்த பொழுது அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.