Advertisment

சென்னையில் வெளிநாட்டு விபசார அழகிகள் மீட்பு : தரகர்கள் 4 பேர் கைது

arrested for brokers

Advertisment

இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை அணுகி, அவர்களிடம் வெளிநாட்டு அழகிகள் உள்ளனர் என்று ஆசைக்காட்டி, சென்னையில் பிரபல ஓட்டல்களில் அழைத்து விபசார தொழில் செய்த 4 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு வெளிநாட்டு அழகிகள் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்திற்கு அணுப்பப்பட்டனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் பிரபல நட்சத்திர ஓட்டலில், இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை அணுகி, வெளிநாட்டு அழகிகள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களை அழைத்து வந்து விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த அழகிகளுக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு அந்த நட்சத்திர ஓட்டலில் விபசார தடுப்பு போலீசார் திடீரென நுழைந்தனர். பல்வேறு அறைகளில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அப்போது ஓட்டலில் உள்ள சொகுசு அறை ஒன்றில் இரண்டு வெளிநாட்டு 2 அழகிகள் விபசாரத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அவர்களை மீட்ட விபசார தடுப்பு போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களை உல்லாசம் அனுபவிக்க அழைத்தது தொடர்பாக தரகர்கள் மதியழகன், பாண்டியன், ஓட்டல் ஊழியர்கள் முரளி, முகமது அசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ளார் என்றும், அவர்தான், வெளிநாடுகளில் இருந்து அழகிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

brokers arrested
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe