Arrested in Armstrong case, sudden chest pain

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு ரவுடிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது சிலர் போலீஸ்காவலில்எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது அவர் பூந்தமல்லி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட பொழுது போலீசரை தாக்க முயன்றதாக என்கவுன்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

.