இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற ஐந்து இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
மதுரை ஆனையூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட ஜந்து பேர் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்றபோது சுங்கத்துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment