/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/82.jpg)
பெண்களை கொச்சையாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யும்வரை வேலைக்கு போக மாட்டோம் என்று அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசியச் செயலர் என்று சொல்லிக்கொள்ளும் எச்.ராஜா என்பவர் அரசியலிலோ மக்களிடமோ துளியும் செல்வாக்கு இல்லாத தனிநபராகவே தெரிந்து வந்த இவர், மதத்தின் பெயரால் இயக்கம் தொடங்கி இருப்பதாக கூறிக்கொண்டு மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
தரம் கெட்டு பேசி பிரபலம் ஆகிவிடலாம் என பகல் கனவு காண்கிறார். அதனால்தான் இதுவரை இவரை கண்டு கொள்ளாமல் இருந்தோம். தேர்தல் நெருங்க நெருங்க மத வெறியை தூண்டி பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் இவர் அரசுத் துறைகளையும் கடுமையாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
இதற்கான எதிர்ப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணாவில் ஈடுபட்டோம். தற்போது தமவாதிகள் தன்பக்கம் ஒண்றினைவார்கள் என தம்மின மக்களை தூண்டிவிட்டு ஒற்றுமையை குளைக்கும் வகையில் மததுவேசம், துறை துவேசம் போன்றவற்றை கையில் எடுத்துள்ளார்.
அரசத் துறை மற்றும் நீதித்துறையை விமர்சிப்பது நாட்டின் இறையாண்மையை சீர்குலைப்பதற்கு சமம். இவர் இதனை கருத்தில் கொள்ளாமல் சிறுபாண்மையினரைக் கொச்சைப்படுத்துவதோடு இந்து சமய மக்களையும் நீங்கள் இந்துக்கள் இல்லை என தமக்கு எதிராகப் பல சமூகத்தவரை படையெடுக்கும் வகையில் உணர்வுகளை தூண்டுவிட்டு குளிர்காய நினைக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/81_1.jpg)
அதிலும் நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்களை தரகுறைவாக திட்டியதோடு அவர்களின் வீட்டு பெண்களையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளால் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
தங்கள் வீட்டு பெண்களை விலை பேசி விற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள் வட இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பிறந்தவராய் இருக்க கூடும் என்று கருதுகிறோம். இவரின் அநாகரிக செயல் தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு இதை சந்தர்ப்பமாக்குவது கேவலமான செயலாக கருதுகிறோம்.
இவரை கைது செய்யும் வரை பணிக்கு திரும்புவதில்லை என்று தீர்மானித்து இவர் மீது வழக்கு தொடுக்கவும் அறநிலையத்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்துள்ளோம் என்று தலைவர் சீதரன், துணைத் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் பாரதி, துணை செயலாளர் ஷாஜிராவ், பொருளாளர் சம்பத்குமார், துணைச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Follow Us