இளம் பெண் பத்திரிகையாளரை பாலியல் சீண்டல் செய்த ஆளுநரை கைது செய்ய வேண்டும். பெண் ஊடகவியயாளர்களை மிகவும் ஆபாசமாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆளுநர் மாளிகையை பேரணி சென்றனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், உ.வாசுகி உள்பட சிபிஎம் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.