ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்டு

Arrest warrant for absent police inspector

புதுக்கோட்டையில் விபத்து வழக்கில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி (தஞ்சை மாவட்டம்) கிராமத்தைச் சேர்ந்த முனியய்யா மகன் சின்னத்துரை (எ) சுந்தரவடிவேல் (40/2015) புதுக்கோட்டை மாவட்டம் தீர்த்தான்விடுதி கிராமத்தில் 2015 ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விபத்து வழக்கு விசாரணை கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணையிலும் காவல் ஆய்வாளர் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

காவல் ஆய்வாளர் சகாயம் அன்பரசு கடந்த வாரம் வரை புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் பணியாற்றிவர் தற்போது திருச்சி ரேஞ்சில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

case police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe