
கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைது தொடர்பாகத்தமிழக முதல்வர், சீனியர் அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்றுள்ள தமிழக முதல்வர், சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. நீதிபதிகள் எம். சுந்தர் சக்திவேல் அமர்வில் திமுக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். இந்த வழக்கிற்கு தேவையான சட்ட விதிமுறைகளை மீறி மனித நேயமற்ற முறையில்நடந்து கொண்டுள்ளது அமலாக்கத்துறை.
விசாரணை என்ற பெயரால் நேரத்தைக் கடத்தி செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளனர். நேற்று அவரை வழக்கறிஞரைக் கூட சந்திக்க விடவில்லை என திமுக தரப்பு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. அதேபோல் தனது கணவரை சட்ட விரோதமாகக் கைது செய்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின்மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி கைது குறித்து திமுக செய்துள்ள இந்த முறையீடு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)