Skip to main content

அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது!!

Published on 04/11/2018 | Edited on 04/11/2018

 

arrest  man who spread the scandal to the minister Jayakumar

 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூலில் அவதூறு தகவல்களை பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு ஊடகத்தின் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார்.

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர் 2017-ஆம் ஆண்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறாக தகவல் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

 

இதையடுத்து நேற்றுமுன்தினம் வீரமுத்து சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பினார். விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீசார் அது அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த வீரமுத்து தான் என உறுதி செய்தபின் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வீரமுத்துவை சைதாப்பேட்டை 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் 15 நாட்கள் ஆஜராகி கையெழுத்திடவும், அனைத்து ஊடகங்களின் முன் இதுபோன்று இனி செய்யமாட்டேன் என மன்னிப்பு கேட்கவும் உத்தரவிடப்பட்டது.

 

இதனையடுத்து முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பியதற்காக வீரமுத்து அனைத்து ஊடகதத்தின் முன் மன்னிப்பு கேட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விற்கு கூலிக்கு மாரடிப்பவராக ஓ.பி.எஸ். இருக்கிறார்” - ஜெயக்குமார் தாக்கு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Jayakumar said OPS is a mercenary for BJP

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஓ.பி.எஸ் தரப்பினருக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இன்று (10-02-24) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் முடிந்து ஓபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாஜகவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓ.பி.எஸ்ஸின் குரல் இருக்கிறது. அதனால் தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. எங்களுடைய தனித்தன்மையை பல கட்டங்களில் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். பா.ஜ.கவுடன் இப்போது கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்துவிட்டோம். நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். எங்களை நோக்கித்தான் கட்சிகள் வரும்” என்று கூறினார். 

Next Story

“அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கும்” - ஜெயக்குமார்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
D. Jayakumar says AIADMK manifesto will be a superhero

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றிருந்தனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று (25.01.2024) காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பெற அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

D. Jayakumar says AIADMK manifesto will be a superhero

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் முடிந்து பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மாநிலத்தின் நலனை மையமாக கொண்டு அதிமுக தேர்தல் அறிக்கை  தயாரிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் நலன் சார்ந்ததாக அமையும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு மக்கள் முழுமையாக தெளிவாக இருக்கிறார்கள். அதனால், இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது. 

அதனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு பெரிய சூப்பர் ஹீரோவாக தமிழ்நாட்டில் இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. டி.டி.வி. தினகரனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தினகரன் தனி மரம். அதிமுக ஒரு தோப்பு. அதனால், அவர் கூறும் கருத்துக்களை பெரிதாக பார்ப்பதில்லை. உரிய நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.