arrear exam university of madras decision

Advertisment

சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க பல்கலைக்கழக ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். இந்த முடிவு செயல்வடிவம் பெறும் பட்சத்தில்சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.

அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அரியர் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்விலிருந்து 70%, முந்தைய தேர்விலிருந்து 30% கணக்கிட அரசு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.