Advertisment

அரியர்ஸ் விவகாரம்- ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் வெளியானது!

arrear exam anna university aicte tn govt

அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏ.ஐ.சி.டி.இ. எழுதிய கடிதம் வெளியானது.

Advertisment

கரோனா காரணமாக, தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Advertisment

தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் எழுதியிருந்ததாக கூறியிருந்தார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. மேலும் தனக்கு வந்த கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 30- ஆம் தேதிஏ.ஐ.சி.டி.இ. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எழுதிய கடிதம் வெளியானது. அதில், 'அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது. அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும்' என கடிதத்தில் ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது.

AICTE Anna University arrear exam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe