Advertisment

முறைகேட்டை தட்டிக்கேட்ட அறப்போர் இயக்க நிர்வாகிகள் கைது!!

arrapor iyakkam

காஞ்சிபுரம் தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்திலிருந்து சிட்டலபாக்கம் வரை கழிவுநீர் குழாய்பதிக்கும்பணி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு நேரில்சென்ற அறப்போர் இயக்கத்தை சேர்ந்த பாலா மற்றும் குமரேசன் என்பவர்கள் கழிவுநீர் குழாய் பதிப்பதில் உள்ள டெண்டர் நடைமுறைகளை பற்றி விசாரித்தனர். ஆனால் டெண்டர் பற்றிய விவரங்கள் எதுவும் கூறமுடியாது என கூறப்பட்ட நிலையில் அங்கு நடக்கும் பணிகளைபுகைப்படம் எடுக்கஅறப்போர் இயக்கத்தினர் முயன்றபோதுசெல்போன் மற்றும் காமராக்களை பிடுங்கி வைத்துக்கொண்டனர்.

Advertisment

மேலும் புகைப்படம் எடுத்தற்காக அறப்போர் இயக்கத்தை சேர்ந்தபாலா மற்றும்குமரேசனை தாக்கியள்ளனர். பின்னர் இது பற்றிய புகார் போலீசாருக்கு போக இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். மேலும்அறப்போர் இயக்கத்தினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருவரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment
arrest arappor iyakkam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe