தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், வருகின்ற 7ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப்பதவியேற்க இருக்கிறார். இதற்காக, நாளை மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். இந்நிலையில், இன்று காலையில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.