“ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு...” - உள்துறை செயலாளர் அமுதா தகவல்

“Arrangement for delivery of food items by helicopters Home Secretary Amutha informs

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.12.2023) தீவிர ஆலோசனை மேற்கொண்டார். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மழை வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் உள்துறை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தாம்பரம், திருச்சி, திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து 18 லாரிகளில் 9 லட்சம் மதிப்புள்ள 4000 பிரட் பாக்கெட்டுகள், 10,000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 5000 தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 41 ஆயிரத்து 100 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

நாளை (19.12.0223) காலையில் மதுரையிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லாரிகளில் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள் மதுரை விமான நிலையம்கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக மதுரையில் தனியாக ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

rain Tirunelveli Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe